தினமும் பார்ப்பேனுங்க – இவங்க பதிவை – wordpress ல login பண்ணினதும் top posts லிஸ்ட்ல இருக்கும். சரி, என்ன தான் இருக்கும்னு இன்னைக்கு click செஞ்சு பார்த்தேன் – ஒரு இன்ப அதிர்ச்சி – சமையலுக்கும் பதிவுக்கும் சம்மந்தமே இல்லை!?
இதுமட்டும் இல்லைங்க சமையல் குறிப்புகளும் (அவை தான் பிரதானம்) உண்டு – சுண்டைக்காய் வற்றல் குழம்பு.
அவங்களைப்பத்தித் தெரிஞ்சிக்கனுமா? – ஒரு உறையாடல் -
“அப்ப இதுக்கு முன்னாடி மூணு வருஷமா நெட்ல என்ன செஞ்சுகிட்டிருந்த?”
“3 வருஷமாவா?
) சரியாச் சொல்லணும்னா, எதுவுமே செய்யலை!
)”
“ம்ம்.. மணிக்கணக்கா ஒரு இடத்துல உட்கார்ந்தும் 3 வருஷத்துக்கு மேல எதுவுமே செய்யாம இருக்க எல்லாம் ஒரு திறமை வேணும்.”
“FYI, இனிமேலும் நெட்ல அப்படித்தான் இருக்கப் போறேன். என்ன கிண்டலா? வருஷக்கணக்கா உங்களுக்கு wifeஆ இருந்தாலும் ‘சும்மாத்தான் இருக்கேன்’னு சொல்லிக்கறதில்லையா, அது மாதிரி தான் இதுவும். ”