ஜோக்கு, ஜாலின்னா என்ன?
பதிந்தவர் பிரேமலதா மேல் மே 25, 2007
பிரிட்டிஷ்காரங்க பொதுவாவே தன்னை மட்டம்தட்டித்தான் சிரிப்பாங்க. ப்ரிட்டிஷ் காமெடி சீரிஸ்-ம் அப்படித்தான் இருக்கும். எந்த ஒரு பேச்சிலும் தன்மேல் குறைசொல்லி, மன்னிப்புக்கேட்பார்கள், தவறு நம்மளுடையதாக இருந்தாலும். நம்ம இந்தியர்கள் கிட்ட ஒரு கெட்ட பழக்கம், அடுத்தவங்களை மட்டம்தட்டித்ததன் ஜோக்கடிப்பாங்க. எப்பவும் ஜோக்குங்கிற பேர்ல, ஜாலிங்கிற பேர்ல அடுத்தவங்களை மட்டமாப் பேசி, ஏறி மிதிச்சுப், பேசுறவங்களை எனக்குப் பிடிக்காது. எப்பவும் அடுத்தவங்களை மட்டம்தட்டி ஜாலி பண்ற “ரெம்பவும் ஜோவியலான” இந்தப் பேர்வழிகள், அவங்களை வைச்சு மத்தவங்க ஜாலி பண்ணினா பொறுத்துக்க மாட்டாங்க. almost revenge எடுக்கிறமாதிரி அடுத்தவாட்டி பாய்வாங்க. ஹிப்பாட்டி, தனக்குத்தெரிஞ்ச ஒரு பெண்மணி தன்னை வைச்சு ஜோக்கடிச்சதை பகிர்ந்துக்கிறாங்க. இதுல உள்ள ஜோக் மேட்டர் அவ்வளவு பெரிசாப் படலைன்னாலும், ஹிப்பாட்டி சொல்லவர்ற conceptக்காக இந்தப் பதிவை இங்கே பகிர்ந்துக்கிறேன்.
இந்த இடுகை இடப்பட்ட நாள் மே 25, 2007 இல் 7:36 பிற்பகல் பின்வருமாறு பகுக்கப்பட்டுள்ளது Socialising. You can follow any responses to this entry through the RSS 2.0 ஒடை. உங்களால் முடியும் பதிலிட்டுவிட்டுச் செல்லவும், அல்லது பின்னறியும் தடம் உங்களின் சொந்த தளத்திலிருந்து....