பதிந்தவர் The Visitor மேல் மே 16, 2008
திரைப்படம் எடுக்கனும்னு எனக்கும் ஆசைதான் - ஆனா வாய்ப்பு எங்க கிடக்குது?
இதோ வந்துவிட்டது - அதுவும் ஹாலிவுட்ல; நம்ம அஷோக்கு தான் தர்றாருங்க - அதான் அஷோக் அமிர்தராஜ் தானுங்க.
அவரும், சோனி பிக்ஸ் (Sony PIX) ம் இணைந்து ‘கேட்வே’னு ஒரு ரியாலிட்டி ஷோ மூலமா ஒரு திரைப்பட இயக்குனரை தேர்வு செஞ்சு, அவருக்கு ஹாலிவுட் படம் இயக்க வாய்ப்பு தர்றாங்க.
இந்த விபரத்தை எனக்கு ‘தெரிஞ்சவங்க’ அவருடைய வலைப்பூவில போட்டிருந்தார். நான் அதைப் பார்க்கும் போது போட்டி முடிஞ்சிடுச்சு. ச்சே நம்ம நேரம். 
போட்டில கலந்துகிட்ட போட்டியாளர்களையும் அவர்களுடய படைப்புக்களையும் இங்க பாக்கலாம்.
இப்ப திரைக்கதை எழுத்தாளர்களுக்கு ஒரு போட்டி துவக்கியிருக்காங்க - நமக்கு இந்த ஜுஜூபி வேலையெல்லாம் ஆகாதுங்க - நீங்க வேணா பாருங்க. 
.... இங்கே பதியப்பட்டது Announcement, Competitions, Entertainment, Entertainment Industry, Movie, TV, சினிமா, தொலைக்காட்சி, போட்டி | மறுமொழி இல்லை »
பதிந்தவர் The Visitor மேல் ஆகஸ்ட் 15, 2007
.... இங்கே பதியப்பட்டது Dance, Entertainment, TV, தொலைக்காட்சி, நாட்டியம், பொழுதுபோக்கு, வீடியோ | குறிச்சொல்லிடப்பட்டது: தொலைக்காட்சி, நாட்டியம், பொழுதுபோக்கு, வீடியோ, Dance, Entertainment, TV, Video | 3 மறுமொழிகள் »
பதிந்தவர் பிரேமலதா மேல் ஏப்ரல் 20, 2007
.... இங்கே பதியப்பட்டது TV, ஆங்கிலம், தொலைக்காட்சி | மறுமொழி இல்லை »
பதிந்தவர் பிரேமலதா மேல் மார்ச் 12, 2007
சீதையைத் தீக்குளிக்கச் சொன்ன ராமன் நல்லவனா(ரா)? கெட்டவனா(ரா)? அப்படின்னு ஒரு கூட்டம் வாதாடும். அனுமதி கிடைக்காமல் அனுகக் கூடாது-ன்னு சீதையை நெருங்காத, மற்றும் சிவபக்தனான ரானணன் நல்லவனா கெட்டவனா-ன்னு இன்னொரு கூட்டம் வாதாடும். வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்யத் தெரியாம கதையா உருவகப் படுத்தி, ஜெயித்தவன் ஹீரோ (மற்றும் கடவுள்), தோத்தவன் வில்லன் (மற்றும் அரக்கன்)-னு சொல்லிட்டுப் போயிட்டாங்கன்னு நான் சொல்லுவேன். தமிழ்நாட்டுல “சாமி/அரக்கன்”ங்கிறது தாண்டி தன்னோட நிஜ வாழ்க்கையில யோசிக்கலன்னாலும் பட்டிமன்றத்துல “வித்தியாசமா” பேசறதுக்காகவாவது இந்தமாதிரி தலைப்பெல்லாம் வைச்சு, அந்தப் புண்ணியத்தில சில இள ரத்தங்கள் மாறத்தான் செய்தது, அதாவது “யோசிக்க” ஆரம்பிச்சது. வடநாட்டுல போனா ரெம்ப ஷாக்கிங்கா இருக்கும், தமிழ் நாட்டுக்காரர்கள்லாம் ராவணனோட வாரிசுகள்னு பாமர மக்கள் சிலர் நிஜமாவே நம்புறதப் பார்க்கும்போது. ராவணனுக்கு கோயில் இருக்காமே தமிழ் நாட்டுல, அப்படியா? அதோட தீபாவளி ராவணனைக் கொன்ன நாள் (அப்படியா?)ன்கிறதால தமிழர்களுக்கு கரிநாள்…….
இப்போல்லாம் ராவணன் பத்தி டீவில வருதாமே. நல்லா இல்லைன்னுதான் Aspi சொல்றார். இருந்தாலும், வித்தியாசமா இருக்கட்டும்னு எடுக்குறாங்களோ எதுக்கோ, நல்ல ஒளி தெரியுது சுரங்கப் பாதியின் மறுபக்கம் (light at the end of the tunnel-ஐ தமிழாக்கம் செய்தேன்.
)
.... இங்கே பதியப்பட்டது TV, ஆங்கிலம், தொலைக்காட்சி | மறுமொழி இல்லை »