கதம்ப மாலை

Archive for ஜூன் 16th, 2007

திமிங்கிலத்துக்குத் தெரியலை பாருங்க.

Posted by tulsigopal மேல் ஜூன் 16, 2007

இந்தத் திமிங்கிலம் இப்படிப் பண்ணுமா?   க்ரே மீனுக்குப் போட்டு வச்சிருந்த
வலையிலே மாட்டிக்கிட்டு ஓடி(!!) இருக்கு. யாராவது பார்த்தாச் சொல்லுங்கன்னு
அரசு கேக்குது.
எனக்கு என்னவோ வலையில் மாட்டிய சிங்கம் கதை தான் நினைவுக்கு வருது.
எந்த எலி வந்து வலையை கடிச்சுவிடப் போகுதோ!
இங்கே விவரம் இருக்கு, படிச்சுட்டு, உங்க கண்ணுலே இந்தத் திமிங்கிலம்
பட்டாச் சொல்லுவீங்கதானே?

Posted in New Zealand, Tamil | Leave a Comment »

ஆஹா……பெண் ஜனாதிபதியா(மே)?

Posted by tulsigopal மேல் ஜூன் 16, 2007

ரொம்பவும் மகிழ்ச்சியா இருக்கு.  பிரதீபா பாட்டீல் இந்திய ஜனாதிபதியா
வரப்போறாங்கன்னு செய்திகள் வந்துக்கிட்டு இருக்கு.

இன்னும் தேர்தல் முடியலை. ஆனாலும் அவரைப் பத்தி நமக்குத்
தெரியாத விவரங்களையெல்லாம் தொகுத்துக் கொடுத்துட்டார்
நம்ம ‘உண்மைத்தமிழன்.’

தெரியாதவங்க எல்லாம் இப்படி வந்து படிச்சுட்டுப் போங்க.
நாளைக்குப் பரிட்சையில் கேள்வி வந்தாலும் வந்துரும்:-))))

Posted in அரசியல், பெண், பெண்ணியம், Feminism, Politics | Leave a Comment »