அள்ள அள்ளப் பணம்.
Posted by The Visitor மேல் ஜூன் 24, 2008
வாசகர் ஒருவர் தமிழில் ‘டெக்னிகல் அனாலிசிஸ்’ பற்றிய புத்தகம் இருக்கிறதா என்று கேட்டிருந்தார். கூகுலித்துப் பார்த்ததில் (google search) 😉 அடித்தது ஜாக்பாட். பத்ரி தனது பதிவொன்றில் அள்ள அள்ளப் பணம் என்ற புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தார். பதிவிலிருந்து ஒரு மேற்கோள்:
… இந்தப் புத்தகத்தில் பங்குச்சந்தை பற்றிய மிக எளிய அறிமுகம் உண்டு. எல்லாவற்றுக்கும் இந்தியச் சூழ்நிலையிலான எடுத்துக்காட்டுகள். கம்பெனிகள், மூலதனம், பங்குகள், சந்தையில் லிஸ்ட் செய்வது, பங்குகளில் வர்த்தகம் செய்வது, பங்குகளின் முகப்பு விலை, சந்தை விலை, பங்குகளை எப்படி வாங்கி விற்பது, சந்தையில் ஏன் விலை ஏறுகிறது, இறங்குகிறது என ஒவ்வொரு சிறு விஷயமும் விளக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தொடங்கி P/E விகிதம், டெக்னிகல் அனாலிசிஸ் பற்றிய சிறு அறிமுகம் என பல நுணுக்கமான விஷயங்களைப் பற்றியும் வள்ளியப்பன் விளக்குகிறார். …
கூகிலின் மகிமையே மகிமை. 🙂
மறுமொழியொன்றை இடுங்கள்