கதம்ப மாலை

Archive for the ‘கவிதை’ Category

ஓரடியார்

Posted by The Visitor மேல் ஜூன் 28, 2008

இவர் ஓரடிகளில் உலகை அளக்கப் பார்க்கிறார்:

ஒத்தடம் – ஊடலுக்குப் பின்கொடுக்கப்படும் முத்தம்

Tough person-Is one whose inner motives are only gusseable..

Difference of Opinion-A non-empty set given a set of even 2 members

Posted in ஆங்கிலம், எழுத்து, கவிதை, தமிழ், தமிnglish, படைப்புகள், வாழ்க்கை, Life, Poetry | Leave a Comment »

do u have sweet voice?

Posted by muthulakshmi மேல் ஒக்ரோபர் 31, 2007

நீங்கள் இனிமையான குரல் உடையவரா பாடத்தெரிந்தவரா கொஞ்சம் இந்த இனிமையான பாடலுக்கு  உங்கள் குரலில் உயிர்கொடுங்களேன்….

ஆண் :

குறுநகை கண்டால் முகம் கண்டால் நிலவொளி
சிறுவிழி பார்த்தால் துளி பார்த்தால் கதிரொளி
பெண்:

கண்ணுள்ளே கனவாய் நுழைந்தது நீதானே
சிறைகண்ட மனதோரம் காதல் வந்து கொல்லும்
அளவில்லா அன்பை மனம் சொல்ல துடிக்கிறதே

Posted in இசை, கவிதை, படைப்புகள், music | Leave a Comment »

வானத்துல பாணம், பந்தெங்க காணம்

Posted by The Visitor மேல் செப்ரெம்பர் 29, 2007

சுப்பன் கூத்தாடுகிறார்…

வானத்துல பாணம்
பந்தெங்க காணம் […]

😀

Posted in கவிதை, கிரிக்கெட், Cricket, Poetry | Leave a Comment »

மகிழ்ச்சி எது? இலக்கு எது?

Posted by The Visitor மேல் ஜூலை 25, 2007

வாழ்க்கை, மகிழ்ச்சி, இலக்கு… இத்தியாதி..இத்தியாதி.. தலைப்புகள் தான் சமீப காலமா என்னை சுத்தி சுத்தி வருது!? ஒரே பிலாசபி தான், இந்த தாக்கம் இருக்கும் போதே அதைப் பத்தி எழுதிடலாம்னு தான் இந்தப் பதிவு. 🙂

ஒரு நண்பர் தன் பின்னூட்டத்தில் கொடுத்த சுட்டி மூலம் கிடைத்தது – Dan Gilbert explains:
Why are we happy? Why aren’t we happy?
Excerpts about the talk:

Psychologist Dan Gilbert challenges the idea that we’ll be miserable if we don’t get what we want. Our “psychological immune system” lets us feel real, enduring happiness, he says, even when things don’t go as planned. He calls this kind of happiness “synthetic happiness,” and he says it’s “every bit as real and enduring as the kind of happiness you stumble upon when you get exactly what you were aiming for.”

உங்க கம்ப்யூட்டர்ல நேரடியா இறக்குமதி பண்ணனுமா? இங்க சொடுக்குங்க.
என்ன எலியை சொடுக்கீட்டீங்களா? மத்த வேலை ஏதாவது இருந்தா முடிச்சுட்டு வாங்க, சாயும் காலமா பாக்கலாம். இப்ப அங்க ராத்திரியா? பரவாயில்லை – காலைல பாருங்க! 🙂

சுப்பன் வாழ்க்கை, இலக்கு, பாதை ன்னு ஒரு கவிதை போட்டிருக்கார்:

வாழ்க்கையே பாதையாகும்போது
வெற்றி இலக்கு எது?
[…]

Posted in அறிவியல், கவிதை, தத்துவாய்மை, வீடியோ, Philosophy, Poetry, Science, Video | Leave a Comment »

புதுக்கவியோ?

Posted by The Visitor மேல் ஜூலை 4, 2007

நான் தினமும் ‘லாகின்’ செய்ததும் Fastest Growing WordPress.com blogs மற்றும் Top Posts from around WordPress.com பார்ப்பதுண்டு – வேறென்ன… கதம்பமாலை அதில் இருக்கிறதா என்ற ஆவலில் தான்.

சில சமயம் அந்தப் பதிவுகளை கதம்பமாலையிலும் குறிப்பிட்டிருக்கிறேன். இன்று சிதறல் என்ற பதிவுதளத்தைப் பார்த்தேன். ஆச்சரியம் என்னவென்றால், அதன் முதல் பதிவு ஜூலை 2, 2007 அன்றுதான் போடப்பட்டிருந்தது, அதற்குள் Fastest Growing WordPress.com blogs என்ற அந்தஸ்த்தைப் பெற்றுவிட்டது! எப்படிங்க சாதிக்கறங்க?

சிதறல் கவிதைகளாய் இருந்தன… இங்கே ஒரு துகல்…

கரிசனத்துடன் கடிதம் எழுதிக்காண்பர் காதலர்
கரையும் நொடியும் வருடமாம்!

புதிய பதிவுதளம் அமைத்துள்ள சுப்பன் க்கு கதம்பமாலையின் வாழ்த்துக்கள்.

Posted in கவிதை, பதிவுலகம், Blogger, Poetry | 1 Comment »

டீக்கடைக்காரன்

Posted by kaattaaru மேல் ஜூன் 11, 2007

டீக்கடைக்காரன்

காபிக் கடை
நடுநிசி
நிர்ச்சலனமான இரவு
கேலியும் கிண்டலுமாய்
மாணவர்க் கும்பல்

சர் சர் என்று
இரு கைகளுக்கிடையில்
மாறி மாறி ஓடும் டீ
தன்னிலை மறந்தவனாய்
கடமையே கர்மமாய்
காவியமாய்

அக்கணத்தில்
தெய்வமானான் அவன்!

— காட்டாறு

Posted in கவிதை | Leave a Comment »

கனவுகளைக் கண்டு பிடித்துவிட்டார்

Posted by The Visitor மேல் ஏப்ரல் 28, 2007

கனவுகளைத் தொலைத்தவள் – எப்படி, எங்கே, எப்பொழுது தொலைத்தார் என்று தெரியவில்லை.
இப்போது கனவு மெய்ப்பட்டது…. என்கிறார் – வாழ்த்துக்கள்! இவர் கவிதைகளும் புனைவார்.

Posted in கவிதை, தமிழ், Poetry, Tamil, Uncategorized, Writing | 1 Comment »

என் சுயம் தொலைப்பினும்

Posted by பிரேமலதா மேல் ஏப்ரல் 17, 2007

நான் வாழ விரும்புகிறேன்
அவர்கள் அனைவருக்கும் மத்தியில்,
என் சுயம்
காணாமல் போயினும்,
அடையாளம் தொலைப்பினும்..
அனைத்தையும் ஏற்றுக்கொண்டு..,

பரிந்துரை: அனான்

Posted in கவிதை, தமிழ், Poetry | Leave a Comment »

கயிறு

Posted by பிரேமலதா மேல் மார்ச் 8, 2007

நீள அகலமாய் பரந்த வானமும்
தேடி தெரிய சிறகுகளிருக்கும் பிரஞ்சையற்று
கயிறு கட்டிய கால்களோடு
பத்திரமான(!) வானத்தில்கயிற்றில் நுனி யாரிடமென்றறியாமல்
எப்போது வேண்டுமானாலும்
முடக்க படலாமென்ற எச்சரிக்கையுடனும்…அறுக்க முடியாத கயிறொன்றில்லை
பறக்க தொடங்கினால் எல்லையுமில்லை…

நிர்மலா.

Posted in கவிதை, தமிழ், பெண்ணியம், Feminism, Tamil | Leave a Comment »