கதம்ப மாலை

Archive for the ‘நுட்பம்’ Category

tape to cd

Posted by muthulakshmi மேல் ஒக்ரோபர் 27, 2007

“”இன்று டேப்ரெகார்டர் கேட்பாரற்று கிடக்கிறது. டேப் அடிக்கடி சிக்கிக் கொண்டு நல்ல டேப்பெல்லாம் பாழாய் விடுகிறது. ஹெட் வேறு அடிக்கடி கிரீச் கிரீச் னு சத்தம் போடுது. டேப் பாழாயிடும், அதில போடாதே அப்படீன்னு ஒரு பயமுறுத்தல் வேறெ.

அந்த டேப்-புக்களுக்கு உள்ளே தானே பத்து வருஷத்துக்கு முன்னாடி என் சகதர்மிணி சித்தி வினாயகர் கோவிலில் செய்த தேங்கா-மூடி கச்சேரியும், என்னோட பெண் மழலையில் மிழற்றிய “குட்டெ குட்டெ கத்திரிக்கா குண்டு குண்டு சுண்டக்கா” ரைம்ஸ்-உம் எனக்குப் பிடித்த பெங்களூர் ரமணியம்மாவின் “வேல் முருகா வேல் வேல்” ஹை எனர்ஜி பாடலெல்லாம் எல்லாம் புதைந்து கிடக்கிறது. “” இப்படி கவலைப்படறவங்களா நீங்க ஒலிநாடாவிலிருந்து எப்படி சிடி குறுவட்டுக்கு மாத்தரதுன்னு எழுதி இருக்கிறார் செய்துபாருங்கள்.

Posted in நுட்பம், music, Tech | Leave a Comment »

சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு

Posted by பிரேமலதா மேல் ஜூன் 26, 2007

உங்களுக்குத் தமிழைத் தவிர வேறு ஒரு இந்திய மொழியும் தெரியும். புரிந்துக்கொள்வதில் பெரிய சிரமம் எதுவும் இல்லை. ஓரளவுப் பேசவும் செய்வீர்கள். ……. ஆனால் வாசிக்கத் தெரியாது. …… இணையத்திலேயே அந்த மொழியில் அமைந்த நூற்றுக்கணக்கான வலைப்பக்கங்கள் உள்ளன. அவற்றில் சுவையான, தரமான ஆக்கங்கள் பலவும் இருக்கக்கூடும். ஆனால் அந்த மொழியின் எழுத்துக்களைக் கற்றுக்கொண்டு, கணினித் திரையில் ஒவ்வொரு எழுத்தாகக் கூட்டி ஆமை வேகத்தில் வாசிப்பது நடைமுறைக்கு ஒத்துவருவதாகத் தெரியவில்லை.

இதோ வருகிறது பதில்:

INIYAN (இனியன்) – Tamil Transliteration Tool for Indian languages

அப்படியே தமிழ்லயிருந்து தங்கலீசுக்கும் கிடைச்சா தமிழ் வாசிக்கத்தெரியாத நிறயப் பேருக்கு உதவியாயிருக்கும்.

Posted in தமிழ், நுட்பம், Tech blogging | Leave a Comment »

கணினியும் இசையும்

Posted by பிரேமலதா மேல் ஏப்ரல் 16, 2007

இந்தமாதிரி” போஸ்ட்லாம் அப்படியே தாண்டிப்போயிடுவேன். உபயோகமான எதுமே படிக்கிற பொறுமைதான் எனக்கு பிறப்பிலயே கிடையாதே.

பரிந்துரை: அனான்

Posted in தமிழ், நுட்பம், Tech blogging | Leave a Comment »